search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்றவர்"

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி தலைமையிலான காவலர்கள் வளையாம் பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த குமார் (வயது 43) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

    • ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமை யிலான தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டியை அடுத்த பெரிய எலந்தம்பட்டு அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42)என்பவர் அதே பகுதியில் புதுவை யில் கடத்தி வந்து சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலையை கைது செய்து அவனிடமிருந்த சாராயத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்க்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் கொசப்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது23) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×